“கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன்” – இந்துஜா

Webdunia
புதன், 9 மே 2018 (17:58 IST)
‘கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார் இந்துஜா. 
ரத்னகுமார் இயக்கிய ‘மேயாத மான்’ படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. படத்தில், வைபவ் – பிரியா பவானிசங்கர் ரொமான்ஸைவிட,  விவேக் பிரசன்னா – இந்துஜா ரொமான்ஸ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது.
 
அதன்பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ‘மெர்க்குரி’ படத்தில் நடித்தார். சைலண்ட் த்ரில்லரான இந்தப் படத்தில், வாய்பேச முடியாத  மாற்றுத்திறனாளி வேடத்தில் அவர் நடித்திருந்தார். இந்தப் படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துவரும்  ‘பூமராங்’ படத்தில் கமிட்டாகியிருக்கிறார் இந்துஜா. ஏற்கெனவே ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடித்துவரும் நிலையில், இரண்டாவது ஹீரோயினாக இவர்  கமிட்டாகியுள்ளார்.
அடுத்ததாக, அட்லீயின் உதவியாளர் ஈனாக் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்திலும் நடிக்கிறார் இந்துஜா. இந்தப் படத்தில், ‘மேயாத மான்’  படத்தில் நடித்த பிரியா பவானிசங்கரும் நடிக்கிறார்.
 
“எல்லா படங்களிலும் என்னுடைய கேரக்டருக்கு தனித்துவம் இருக்கும். கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார் இந்துஜா.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்