ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் கீர்த்தி சுரேஷ்.
ஆனால் அவருக்கு படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய ரோல் இல்லை. நடிகர் விஜய்யை மட்டுமே கருவாக கொண்டு சர்கார் படத்தின் காயை நகர்த்தினார் இயக்குனர் முருகதாஸ்.
இதனால் படத்தில் தன் பகுதிகளை குறைத்து தன்னை டம்மியாக்கிய முருகதாஸ் மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ் .
இந்நிலையில் தற்போது, இதற்காக ஒரு அதிரடி முடிவையும் எடுத்துள்ளாராம், அதாவது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கவுள்ளாராம்.
அதைத்தவிர பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிக்கும் போது தன் ரோல் என்ன என்பதை மிக கவனமாக முன்கூட்டியே கேட்டு முடிவெடுக்கிறாராம்.
மேலும் தான் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் படத்தில் இடம் பெற வேண்டும் என்று உறுதி வாங்கிக்கொள்கிறாராம்.