எனக்கு விருதுகள் மீதான ஆர்வம் போய்விட்டது- பிரபல நடிகர் நசுருதீன் ஷா

Webdunia
புதன், 7 ஜூன் 2023 (13:59 IST)
பிரபல பாலிவுட் நடிகர் நசருதீன் ஷா. இவர்  நிஷாந்த், பூமிகா, ஜூனுன், ஸ்பர்ஷ், பவானி பவை, ஓம்காரா,மஹாரதி, இஷ்கியா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகரான நசுருதீன் ஷா விருதுகளை அவமதித்துக் கருத்து கூறியதாக ஒரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சமீபத்தில் இதுபற்றி  நசுருதீன் ஷா அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் ‘’கதாப்பாத்திரத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைப்பவர்தான் சிறந்த நடிகர், தற்போது திரைத்துறையில் இருக்கும் நடிகர்களில் ஒருவரை தேர்வு செய்து அவரை  இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர் என்று யாரோ ஒருவர் அறிவிப்பது எந்த வகையில் சரியானது? ‘’என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’விருதுகளை பார்த்து நான் மகிழ்ச்சியடைய மாட்டேன். சமீபத்தில் எனக்கு அறிவித்த இரண்டு விருதுகளை  வாங்க நான் செல்லவில்லை. ஆரம்ப காலக்கட்டத்தில் விருதுகள் வாங்கும் போது மகிழ்ந்தேன். அதன்பின்னர் அந்த விருதுகள் எப்படி வருகிறது என்பதை அறிந்த பின் அதன் மீது எனக்கு ஆர்வம் போய்விட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்