கங்கை அமரனுக்கு காதல் தூதரா போயிருக்கேன்: எஸ்.பி.பி. கலகல...

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (16:11 IST)

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்,  கங்கைஅமரனுக்கும் அவர் மனைவிக்கும் இடையே காதல் கடிதங்கள் கொடுக்கும் தூதுவனாக செயல்பட்டதாக தெரிவித்தார்.

கங்கை அமரனின் மகனும் பிரபல இயக்குனருமான  வெங்கட்பிரபு அடுத்ததாக இயக்கிக்கொண்டிருக்கும் படம் பார்ட்டி. சத்யராஜ், ஜெய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி இசை அமைத்து வருகிறார்.

இந்தப் படத்தில், சத்யராஜுக்காக ஒருபாடல். அதைப் பாட எஸ்.பி.பி வந்திருந்தார்.

அப்போது அவர், பேசுகையில்,

பிரேம்ஜியை சின்னப்பையன்லேருந்தே தெரியும். இவங்க பெரியப்பா இளையராஜா இசைல பாடியிருக்கேன். அதேபோல இவங்க அப்பா கங்கைஅமரன் இசைலயும் பாடியிருக்கேன். இப்போ, இவங்க அண்ணன் வெங்கட்பிரபு இயக்கத்துல, இவன் இசையமைப்புலயும் ஒரு பாட்டு பாடக் கூப்பிட்டிருக்கான். அந்தப் பாட்டைப் பாடுறதுக்காகத்தான் வந்திருக்கேன்.

இன்னும் சொல்லப்போனா, இவனோட (பிரேம்ஜி) அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அந்தக் காலத்துல லவ்லெட்டர் எடுத்துட்டுப் போய், தூது போனவன் நான்.

இவ்வாறு எஸ்.பி.பி. கலகலவென்று பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்