விஜய் சேதுபதி அளவுக்கு என்னால் நடிக்க முடியாது - ஹிருத்திக் ரோசன்

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (23:12 IST)
விக்ரம் வேதாவில் நடிகர் விஜய்சேதுபதி அளவுக்கு என்னால்  நடிக்க முடியாது என்று பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோசன் தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழில், மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

விக்ரம், வேதா படத்தின்   டீசர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இப்படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸ் ஆனது.

இந்த நிலையில்,  வரும் 30 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில்,  இப்படத்தின் புரமோஷன் பணியில் படக்குழு ஈடுபட்டடுள்ளது.  இந்த புரமோசன் நிகழ்ச்சியில், நடிகர் ஹிருத்திக் ரோசன், விஜய்சேதுபதியைப் புகழ்ந்துள்ளார். அதில், விக்ரம் வேதாவின் விஜய்சேதுபதி அற்புதமாக நடித்திருந்தார். அவர் அளவுக்கு என்னால் கனவிலும் நடிக்க முடியாது. என்னால் இயன்றதைச் செய்திருக்கிறேன்.  இப்படம் நன்றாக வந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்