பாலிவுட்டில் வாய்ப்புகளைப் பெறும் சாம் சி எஸ்… எல்லாத்துக்கும் இந்த படங்கள்தான் காரணம்!

சனி, 10 செப்டம்பர் 2022 (14:09 IST)
கடந்த 2017 ஆம் ஆண்டு மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தை ஹ்ருத்திக் ரோஷனும், மாதவன் கதாப்பாத்திரத்தை சயிஃப் அலிகானும் ஏற்று நடித்துள்ளனர். தமிழில் இயக்கிய புஷ்கர்-காயத்ரி ஆகியோரே இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. தமிழில் இசையமைத்த சாம் சி எஸ் இந்த படத்துக்கும் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படம் செப் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், சமீபத்தில் டிரைலர் வெளியானது. இந்த டிரைலரின் பின்னணி இசை வெகுவாகக் கவனிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்து பாலிவுட்டில் இருந்து பட வாய்ப்புகள் குவிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அவர் இசையமைத்த, ராக்கெட்ரி திரைப்படம் பரவலான கவனத்தைப் பெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்