தேவை என்றால் மன்னிப்பு கேட்க தயார்! கமல்ஹாசன்

Webdunia
சனி, 15 ஜூலை 2017 (00:15 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று முன் தன்னுடைய ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் பத்திரிகையாளரை சந்தித்தார். அப்போது பாலியல் தொல்லைக்கு ஆளான மலையாள நடிகையின் பெயரை பேட்டியில் கமல் கூறியதாகவும் இதற்காக அவர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது



 
 
இதுகுறித்து கமல் தன்னுடைய டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நடிகை பலாத்கார வழக்கில் பெயரை குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பெண்கள் கூறுகின்றனர். கடவுளை தவிர சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. குற்றவாளிகளை விட்டுவிட்டு வழக்கறிஞரை தண்டிப்பது போல் உள்ளது.
 
காரணம் இன்றி யாருக்காகவும், எதற்காகவும் நான் வளைந்து கொடுப்பது கிடையாது. பெண்களை நேசிப்பவன், அவர்களது உரிமைக்காக போராடுபவனும் கூட. இந்த விஷயத்தில் தேவைப்பட்டால் மன்னிப்பு கேட்க தயார்; என்னுடைய தாய்க்கும் மகளுக்கும் அடுத்ததாக அவருடைய பெயரை கூறினேன் என்று டுவிட்டரில் கமல் கூறியுள்ளார். 
 
மேலும் கமல் கூறிய ஒருசில விஷயங்கள் பலருக்கு புரியவில்லை. அவர் தமிழில் டுவீட் போட்டாலே பலருக்கு புரியாது. இந்த நிலையில் ஆங்கிலத்தில் டுவீட் செய்துள்ளதால் பலர் புரியாமல் குழப்பம் அடைந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்