அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2007ம் ஆண்டு வெளியான படம் பருத்திவீரன். இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்தார். இந்தப் படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த படத்தின் இயக்குனர் அமீர் தரப்புக்கும், ஞானவேல் ராஜா தரப்புக்கும் இடையில் பிரச்சனை நீடிக்கிறது.
இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், சமீபத்தில், அமீர் பற்றி ஞானவேல் ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சசிக்குமார், சமுத்திரகனி, சுதா கொங்கரா, பாரதிராஜா உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவளித்தனர்.
இந்த நிலையில், இயக்குனர் நந்தா பெரியசாமி, அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: