விஜய் படத்துக்காக சென்னையில் தயாராக உள்ள பிரம்மாண்டமான வீடு! தளபதி 66 அப்டேட்!

செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (16:28 IST)
விஜய் 66 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதற்கான முன் தயாரிப்பு வேலைகள் இப்போது நடந்து வருகின்றன.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.

தளபதி 66 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படம் குடும்ப செண்ட்டிமெண்ட் காட்சிகள் கொண்ட படம் என்பதால் படத்தில் விஜய்யின் வீடு ஒரு முக்கியமான அங்கம் வகிக்கிறதாம். அதற்காக சென்னையில் இப்போது பிரம்மாண்டமான வீட்டின் செட் அமைக்கும் வேலைகள் நடந்து வருகிறதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்