மீண்டும் போட்டியில் ராஷ்மிகா மந்தனா & பூஜா ஹெக்டே! இந்தமுறையும் விஜய் படத்துக்காகதான்!

புதன், 9 பிப்ரவரி 2022 (16:07 IST)
ராஷ்மிகா மந்தனா மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய இருவரில் ஒருவர்தான் விஜய் 66 படத்தின் கதாநாயகியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.

காவலன் படத்துக்கு பிறகு விஜய் ஆக்‌ஷன் கம்மியாகவும், செண்ட்டிமெண்ட் மற்றும் காதல் காட்சிகள் அதிகமாகவும் கொண்டு இந்த படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் விஜய்யைத் தவிர பிரகாஷ் ராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவருக்கு இடையில் கடுமையான போட்டி நிலவுவதாக சொல்லப்படுகிறது. பீஸ்ட் படத்தின் கதாநாயகி தேடுதலின் போதும் இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி நடந்து அதில் பூஜா தேர்வு செய்யப்பட்டார். அந்த வகையில் இந்த முறை வெல்லப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்