ஹீமா குரேஷிக்கு விருந்தளித்த ரஜினி

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (16:07 IST)
ரஜினிகாந்த் தனக்கு விருந்தளித்ததாக ’காலா’ படத்தின் ஹிரோயின் ஹீமா குரேஷி தெரிவித்துள்ளார்.
 
 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. மும்பையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், நானா படேகர், ஈஸ்வரி ராவ், அஞ்சலி பட்டேல், சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இதை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படம், வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது.
 
இந்த படத்தில் ஹிரோயினாக நடித்துள்ள பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ரஜினிகாந்த் பற்றி பேசியபோது, காலா படத்தில் நடித்தபோது ரஜினியின் எளிமையை கண்டு வியந்தேன், அவர் ஒரு மகளைப் போலவே தன்னிடம் அன்பு காட்டியதாகவும், அவரது வீட்டிலிருந்து உணவை வரவைத்து படப்பிடிப்பு தளத்தில் தனக்கு விருந்தளித்ததாகவும் தெரிவித்தார். மேலும், காலா படத்தை தொடர்ந்து தென்னிந்திய திரைபடங்களில் நடிக்க ஆர்வம் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்