புற்றுநோயால் பாதித்த சிறுவனை நேரில் சந்தித்து நம்பிக்கையூட்டிய விஜய்சேதுபதி!

வியாழன், 24 ஜூன் 2021 (19:30 IST)
புற்றுநோயால் பாதித்த சிறுவனை நேரில் சந்தித்து நம்பிக்கையூட்டிய விஜய்சேதுபதி!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து அந்த சிறுவனுக்கு நம்பிக்கை ஒட்டிய விஜய்சேதுபதி பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் விஜய் சேதுபதியை பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததை அடுத்து அவரது குடும்பத்தினர் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தை தொடர்பு கொண்டனர். இந்த நிலையில் விஜய் சேதுபதிக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் தன்னை பார்க்க வேண்டும் என்ற தகவல் கிடைத்தவுடன் உடனடியாக அந்த சிறுவனையும் அவருடைய குடும்பத்தினரையும் தன்னுடைய வீட்டிற்கு அழைப்பு விடுத்தார்
 
இந்த அழைப்பை அடுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனும் அவரது குடும்பத்தினரும் விஜய்சேதுபதியை அவரது வீட்டில் நேரில் சென்று சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 
 
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட விஜய் சேதுபதி அந்த சிறுவனுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அந்த சிறுவனிடம் நீ விரைவில் குணமாகிவிடுவாய் என்று நம்பிக்கை தெரிவித்ததும் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்