உசேன் பொல்ட் வெளியிட்ட இரட்டைக் குழந்தைகளின் புகைப்படம்!

செவ்வாய், 22 ஜூன் 2021 (12:56 IST)
உலகின் மிக வேகமான மனிதர் என சொல்லப்படும் உசேன் போல்ட் தன்னுடைய இரட்டைக் குழந்தைகளின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கம் பெற்ற ஒரே வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளவர் உசேன் போல்ட். 2019 ஆம் ஆண்டு முதல் அனைத்து விதமான போட்டிகளிலும் அவர் ஓய்வு பெற்றார். அதையடுத்து இப்போது தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது காதலி பென்னட் மற்றும் இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் இதற்கு முன்னர் போல்ட் தனக்கு குழந்தை பிறந்ததை வெளி உலகுக்கு அறிவிக்கவில்லை. குழந்தைகளுக்கு தண்டல்போல்ட் மற்றும் செயிண்ட் லியோ போல்ட் என பெயர் சூட்டியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்