ஹனிமூன் கேள்வி.... டிவி லைவ் ஷோவில் காமெடியனை அறைந்த பாடகி!

Sinoj
வியாழன், 29 பிப்ரவரி 2024 (14:21 IST)
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி ஷாஜியா மன்சுர்,லைவ் ஷோ ஒன்றில் பங்கேற்றபோது, காமெடி  நடிகரை அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி ஷாஜியா மன்சூர். இவர் ஒரு டிவி லைவ் ஷோவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
 
அந்த நிகழ்ச்சியில் காமெடி நடிகர் ஷெர்ரி  நன்ஹாவுடன் ஷாஜியா உரையாடிக் கொண்டிருந்தபோது,இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
 
அதாவது, ''ஒருவேளை நமக்கு திருமணம் ஆனால், நமது ஹனிமூனுக்கு உங்களை மான்டே கார்லோவுக்கு அழைத்துச் செல்வேன். நீங்கள் எந்த வகுப்பில் பயணிக்க விரும்புகிறீர்கள் என்று கூற முடியுமா ?'' என்று ஷெர்ரி  நன்ஹா நகைச்சுவையாக கேட்டார் 
 
இந்தக் கேள்வியை எதிர்பார்க்காத ஷாஜியா மன்சூர், ஆத்திரத்தில், ஷெர்ரி நன்ஹாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கினார். அத்துடன் ''நீங்கள் 3 ஆம் வகுப்பில் பயணிக்கும் நபர்!  பெண்களிடம் இப்படித்தான்  பேசுவீர்களா? ஹனிமூன் என்று கூறுகிறீர்கள்? என்று விமர்சனம் செய்தார்.
 
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்