தளபதி விஜய்யின் ‘லியோ’ 4வது புதிய போஸ்டர் ரிலீஸ்..!
வியாழன், 21 செப்டம்பர் 2023 (18:20 IST)
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான லியோ திரைப்படத்தின் மூன்று போஸ்டர்கள் கடந்த மூன்று நாட்களாக வெளியான நிலையில் இன்று நான்காவது போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஹிந்தியில் உருவாகி உள்ள இந்த போஸ்டரில் விஜய் மற்றும் சஞ்சய்தத் ஆக்ரோஷமாக மோதும் காட்சி இருப்பதை அடுத்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக உள்ளது.
இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து இந்த படத்தின் முக்கிய வில்லனாக சஞ்சய் தத் நடித்துள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஜய் ஜோடியாக திரிஷா நடித்துள்ள இந்த படத்தில் சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் லியோ படத்தில் நடித்துள்ளனர்.