ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் ‘அன்பறிவு’ ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (07:34 IST)
தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹிப்ஹாப் தமிழா ஆதி ’மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு ஹீரோவானார். அதன் பின்னர் அவர் நடித்த நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அவர் தற்போது சிவகுமாரின் சபதம் மற்றும் ‘அன்பறிவு’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த 2 படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ‘அன்பறிவு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாலை 5 மணிக்கு வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது
 
அஸ்வின் ராம் என்பவர் இயக்கும் இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஜோடியாக காஷ்மிரா நடித்துவருகிறார். மேலும் முக்கிய வேடத்தில் நெப்போலியன் விதார்த் உள்பட பலர் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிப்ஹாப் தமிழா இசையில் மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் பிரதீப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்