ஒரு நாளில் ஒரு மில்லியன் வியூஸ்… சிவகுமாரின் சபதம் டிரைலர் சாதனை!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (10:06 IST)
நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது.

இசையமைப்பாளராகவும் பாடகராகவும் இருந்த ஆதியை ஹீரோவாக வைத்து சுந்தர் சி மீசைய முறுக்கு, நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய படங்களைத் தயாரித்தார். இதில் மீசைய முறுக்கு திரைப்படத்தை ஆதியே இயக்கினார். அதையடுத்து அவர் இப்போது அன்பறிவு எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை பழம்பெரும் நிறுவனமான சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ளார்.

அதையடுத்து ஆதி நடிக்கும் படத்தையும் அதே நிறுவனமே தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு வித்தியாசமான தலைப்பாக சிவக்குமாரின் சபதம் என்று பெயர் வைத்துள்ளாராம் ஆதி. ஆதியின் படங்கள் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று மதியம் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது இந்த டிரைலர். இது இதுவரை ஆதியின் படங்கள் செய்யாத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்