மீண்டும் தயாரிப்பாளராகக் களமிறங்கும் ஹிப் ஹாப் ஆதி… இயக்குனர் இவர்தான்!

vinoth

வியாழன், 26 செப்டம்பர் 2024 (09:19 IST)
தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் நடித்த முதல் படமான ‘மீசைய முறுக்கு’ படத்தை இவரே இயக்கி, நடித்தும் இருந்தார். அதன்பின்னர் பல படங்களில் நடித்தவர் நீண்ட காலம் படம் நடிக்காமல் இருந்து, பின்னர் சமீபத்தில் ‘பிடி சார்’ என்ற அவருடைய படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த படத்தைத் தொடர்ந்து அவர் மீண்டும் இயக்கிய படமான ‘கடைசி உலகப்போர்’ கடந்த வாரம் வெளியாகி எந்தவிதமான அதிர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்த படத்தை அவரே தயாரித்தும் இருந்தார்.

இந்நிலையில் அவர் அடுத்து மீண்டும் ஒரு படத்தைத் தயாரிக்க, அந்த படத்தை டார்லிங் மற்றும் 100 ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்