இல்லத்தாற்கு உகந்த தடையில்லாப் பொதுக்காட்சி… மெய்யழகன் சென்சார் தகவல்!

vinoth

புதன், 25 செப்டம்பர் 2024 (11:17 IST)
96 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் தற்போது கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் ‘மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.  படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் ராஜ்கிரண் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

படம் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் போஸ்டர்கள், கிளர்வோட்டம்(டீசர்) எல்லாம் மிக வித்தியாசமாக அமைந்தததால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாமல் மெல்லிய உணர்வு கொண்ட குடும்ப உறவுகள் பற்றிய படமாக இருக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் பற்றிய தகவலைப் படக்குழு அறிவித்துள்ளது. படத்துக்கு U சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் இல்லத்தாற்கு உகந்த தடையில்லாப் பொதுக்காட்சி என படக்குழு அறிவித்துள்ளது. படம் 2 மணிநேரம் 27 நிமிடம் ஓடுமளவுக்கு உருவாக்கப்பாட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்