'மெர்சல்' படத்திற்கு எதிராக இந்து மக்கள் கட்சி போராட்டம்

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (16:33 IST)
விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் படம் சுமாராக இருப்பதாக கலவையான விமர்சனங்கள் எழுந்ததால் மூன்றாவது நாளே திரையரங்குகளில் கூட்டம் குறைய ஆரம்பித்தது.



 
 
ஆனால் தமிழக பாஜகவினர் புண்ணியத்தில் இந்த படம் தற்போது இரண்டாவது வாரத்திலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்த நிலையில் மூன்றாவது வாரத்திலும் வசூல் கிடைக்கும் வகையில் இந்து மக்கள் கட்சியினர் இன்று மெர்சல் படத்திற்கு எதிராக போராட்டம் செய்து வருகின்றனர்.
 
இந்துக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ள காட்சிகளை நீக்க வலியுறுத்தியும், ஜி.எஸ் டி வரி குறித்து தவறான  விபரங்களை வெளியிட்டு பொதுமக்களிடம் குழப்பத்தை உருவாக்கி மத்திய அரசு மீது அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் திரையிடப்பட்டுள்ள காட்சிகளையும் நீக்கிட கோரியும், இந்து மக்கள் கட்சியின்  மாநில துணை தலைவர் திருச்சி மாரி  தலைமையில், "மெகா ஸ்டார்" திரையரங்கம் முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.
 
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சியினர் 21க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்