விஜய்சேதுபதி-த்ரிஷா நடிக்கும் '96' படத்தின் பர்ஸ்ட்லுக் இதுதான்

Webdunia
திங்கள், 31 ஜூலை 2017 (23:08 IST)
முதல்முறையாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மற்றும் த்ரிஷா இணைந்து நடித்து வரும் ரொமான்ஸ் படம் '96'. கடந்த 96ஆம் ஆண்டு காதல் கதையை மையமாக கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சற்றுமுன் வெளியாகியுள்ளது.



 
 
மலையுச்சியில் மேகங்கள் முன் விஜய்சேதுபதி உட்கார்ந்திருப்பது போன்று வெளியாகியுள்ள இந்த வித்தியாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜய்சேதுபதி, த்ரிஷா ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்து ஒருசில நிமிடங்களே ஆகியுள்ள நிலையில் லைக்குகள் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகிறது
 
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் மேனன் என்பவர் இசையமைக்கின்றார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்திற்கு சண்முகசுந்தரம் ஒளிப்பதிவும், கோவிந்த்ராஜ் படத்தொகுப்பு பணிகளையும் செய்யவுள்ளனர்.
 
அடுத்த கட்டுரையில்