நீர்க்குமிழி என்ற படத்தில் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் கே.பாலச்சந்தர் அடுத்ததுத்து தான் இயக்கிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். அதனால் இயக்குநர் சிகரம் என அழைக்கப்படுகிறார். இவரது 90 ஆவது பிறந்த தினம் இன்று.
இவர், தேசிய விருதுகளையும், இந்திய சினிமாவில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் வென்றவர்.
தமிழ் சினிமாவின் பொக்கிஷமாகக் கருதப்பட்ட அவரது பிறந்த நாள் தினத்தன்று சினிமா நட்சத்திரங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து பேசி வருகின்றனர்;.
நடிகர் ரஜினிகாந்த் ஒரு வீடியோவில் கூறியுள்ளதாவது :
கே.பாலசந்தர் சார் அவர்கள் என்னை அறிமுகப்படுத்தவில்லை என்றாலும் நான் நடிகனாக இருந்திருப்பேன். கன்னட சினிமாவில் ஒரு வில்லனாகவோ, சின்னச் கதாப் பாத்திரங்களில் நடித்திருப்பேன். ஆனால் நான் இன்று பேரும் புகழும் வாழ்வதற்குக் காரணமே அவர் தான். எனக்குப் பெயர் வைத்து, என்னிடம் மைன்ஸ்களை நீக்கி, எனது பிளஸ்களை எனக்குக் காட்டிக் கொடுத்து, என்னை ஒரு முழு நடிகனாக்கியதுடன் நான்கு படங்களில் நல்ல கதாப்பாத்திரங்கள் கொடித்து ஒரு நட்சத்திரமாகவே என்னை தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்தார் என தெரிந்துத்துள்ளார்.
மேலும் கே. பாலசந்தர் சார் நீண்ட நாட்கள் வாழ்ந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.