#BlockBusterBEAST இணையதளத்தில் ஹேஸ்டேக் டிரெண்டிங்

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (22:14 IST)
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இப்படம் குறித்த ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இன்று வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்கு திரையரங்குகளில் குவிந்தனர். திரை அரங்கிற்கு வெளியேயும் உள்ளேயும் கொண்டாட்டங்கள் நடந்து சிறப்புக் காட்சிகள் தொடங்கின. பெரும்பாலான ஊர்களில் சிறப்புக் காட்சிகள் முடிந்து ரசிகர்களின் கருத்துகள் சமூகவலைதளங்களில் வெளியாக ஆரம்பித்துவிட்டன.

இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படம்    இன்று வெளியான நிலையில் தியேட்டரில் ரசிகர்களிடையே மோதம் ஏற்பட்டுள்ளது.

கோலமாவு கோகிலா,  டாக்டர் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் – விஜய் இணைந்துள்ள  பீஸ்ட் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இப்படத்திற்கு கலவையான விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், பீஸ்ட் படம் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை திருப்தி படுத்தவில்லை என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்