பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள "கண்ணப்பா" திரைப்படம் ஏப்ரல் 25ஆம் தேதி திரையரங்குகளுக்கு வர இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் விளம்பர பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த படத்தில் சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதோடு, மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார், காஜல் அகர்வால் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது கண்ணப்பா படத்தின் முக்கியமானக் காட்சிகள் மிஸ்ஸாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் பணியாற்றிய ஒரு நபர் முக்கியமான நிறைய விஎஃப்எக்ஸ் பணிகள் செய்யப்பட்டிருந்த காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கோடு தலைமறைவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது படக்குழுவினரும் போலீஸாரும் அந்த நபரைத் தேடி வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே லால் சலாம் படத்தின் காட்சிகளும் இதே போல காணாமல் போனதாக சொல்லப்படுகிறது.