ரஜினி படத்தை தனுஷ் இயக்குகிறார் என்பது வதந்தியா?

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (21:36 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170வது திரைப்படத்தை தனுஷ் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்றும் தனுஷ், ரஜினி படத்தை இயக்க வாய்ப்பே இல்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
தற்போது தனுஷ் 3 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களை முடித்துவிட்டு அவர் வெற்றிமாறன் உள்பட ஒரு சில இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் எனவே 2024 வரை தனுஷ் படங்களை இயக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே அவர் ஒரு பேட்டியில் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு படங்களை இயக்கப் போவதில்லை என்று கூறியிருந்தார். இதனை வைத்து பார்க்கும்போது ரஜினியின் 170வது திரைப்படத்தை தனுஷ் இயக்க வாய்ப்பு இல்லை என்பதே கோலிவுட் வட்டாரங்களில் இருந்து வெளியான செய்திகள் ஆகும்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்