“சிம்புவுக்கு ஒரே ஒரு போன் செய்தேன்…” மஹா ப்ரமோஷன் நிகழ்ச்சியில் ஹன்சிகா நெகிழ்ச்சி

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (10:02 IST)
ஹன்சிகாவின் 50 ஆவது படமான மஹா ஜூலை 22 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான மஹாவில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.  இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டே இருந்த நிலையில் இப்போது சிம்புவின் மாநாடு ரிலிஸ் ஆகி பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் மஹா படத்தின் ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை ஹன்சிகா “இந்த படத்தில் நான் நடிக்க எனது அம்மாதான் முக்கியக் காரணம். அவர்தான் என்னுடைய 50 ஆவது படமாக ‘மஹா’ இருக்கவேண்டும் எனக் கூறினார். இந்த படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு ஒரே ஒரு போன்தான் செய்தேன். உடனே நடிக்க சம்மதித்துவிட்டார். நண்பன் சிம்புவுக்கு நன்றிகடன் பட்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்