டான் டிரம்ப்பின் எக்ஸ் தளத்தை முடக்கி ஹேக்கர்ஸ் விபரீத செயல்!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (19:07 IST)
அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப். இவரது மகன் டான் டிரம்ப் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார்.
 

இந்த நிலையில், அவரது டுவிட்டர் எனும் எக்ஸ் தளத்தை ஹேக்கர்ஸ் முடக்கியதுடன்  பல விபரீத கருத்துகளை பதிவிட்டனர்.

அதாவது அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரும் அவரது தந்தையுமான டொனால்ட் டிரம்ப் பற்றி பல கருத்துகள் பதிவிட்டு, அவர் இறந்துவிட்டதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில்    அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபற்றி டிரம்பின் செய்தி தொடர்பாளர், டிரம்பின் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

பின்னர், சிறிது நேரத்தில் டிரம்பர் பற்றிய இறப்பு செய்திகள் நீக்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்