அஜித் 61 ல் ஆக்‌ஷன் காட்சிகள் இருக்காது… ஹெச் வினோத் சொன்ன ரகசியம்!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (14:41 IST)
அஜித் ஹெச் வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக ஒரு படம் உருவாக உள்ளது.

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை ரிலீஸுக்கு பின் இதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வினோத் அளித்த நேர்காணலில் அந்த படத்தைப் பற்றி பேசியுள்ளார். அதில் ‘எங்களது அடுத்த படம் வலிமை போல இல்லாமல் குறைவான ஆக்‌ஷன் காட்சிகளையே கொண்டிருக்கும். உலக அளவில் மக்கள் எதிர்கொள்ளும் ஒரு சமூகப்பிரச்சனையை பற்றி அதில் பேச உள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்