சிம்புவுக்கு போட்ட பாட்டை தானே பயன்படுத்திக் கொண்ட ஜி.வி.பிரகாஷ்

Webdunia
வெள்ளி, 26 மே 2017 (15:42 IST)
சிம்புவுக்காக இசையமைத்த பாடலை, தான் நடித்த படத்தில் பயன்படுத்திக் கொண்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.



வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில், முதலில் நடிக்க இருந்தவர் சிம்பு. அதேபோல், இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் ஜி.வி.பிரகாஷ். ஆனால், தற்போது சிம்புவுக்குப் பதிலாக தனுஷும், ஜி.வி.பிரகாஷுக்குப் பதிலாக சந்தோஷ் நாராயணனும் ‘வடசென்னை’யின் பணியாற்றி வருகின்றனர்.

முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட உடனேயே, சிம்புவுக்காக ‘உருட்டு கண்ணால’ என்ற பாடலை உருவாக்கிவிட்டார் ஜி.வி. ஏகாதசி எழுதிய இந்தப் பாடலை, சந்தோஷ் ஹரிஹரன், மோனிஷா, மாளவிகா ஆகியோர் பாடியுள்ளனர். ஆனால், தற்போது தனுஷ் நடிப்பதால், தனுஷுக்கும், ஜி.வி.பிரகாஷுக்கும் ஆகாது என்பதால், அந்தப் பாடலை தான் நடிக்கும் ‘செம’ படத்தில் பயன்படுத்தியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
அடுத்த கட்டுரையில்