ஜிவி பிரகாஷ் ஜோடியாக பிக்பாஸ் நடிகை: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

திங்கள், 24 டிசம்பர் 2018 (21:16 IST)
பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வரும் 'வாட்ச்மேன்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் நாய் ஒன்று வாயில் துப்பாக்கி வைத்திருப்பது போன்று உள்ளதால் இந்த போஸ்டர் மூலம் சொல்ல வருவது என்ன? என்பது குறித்த விவாதம் நெட்டிசன்களிடையே ஏற்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் முக்கிய வேடத்க்தில் நடித்து வரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே நடித்து வருகிறார். இவர் ஒருசில கன்னட படங்களிலும், கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் இசையில் நீரவ் ஷா ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை அருண்மொழி மாணிக்கம் தயாரித்து வருகிறார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்