ஜி.வி. பிரகாஷ் படத்தில் ஹீரோயினாக அபர்னதி

Webdunia
வியாழன், 24 மே 2018 (16:21 IST)
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய அபர்னதி, ஜி.வி. பிரகாஷ் படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சி வீட்டு மாப்பிள்ளை. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் அபர்னதி.
இந்நிகழ்ச்சியில் 16 பெண்கள் போட்டிட்டு வெற்றிபெறும் ஒருவரைதான் ஆர்யா திருமணம் செய்யப்போவதாக கூறப்பட்டது. ஆனால் யாரையும் ஆர்யா திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆர்யாவுக்கு சரியான ஜோடி இவர்தான் என்று அவரின் நண்பர்கள் தெரிவித்தனர். இருந்தாலும் நிகழ்ச்சியின் இறுதி  எலிமினேஷன் வரை சென்றார். மேலும் மக்கள் மத்தியில் அவரது செயல்களால் மிகவும் பிரபலம் ஆனார்.
இந்நிலையில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய அபர்னதி ஜி.வி. பிரகாஷ் படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். அந்த படத்தை  காவியத் தலைவன் படத்தை இயக்கிய வசந்தபாலன் இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார். இவருடன் இணைந்து  வசந்தபாலன் பணியாற்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை பூஜையுடன் சென்னையில் துவங்குகிறது. மேலும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், பசங்க படம் புகழ் பாண்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள செம படம் நாளை ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடை பிக்பாஸ் ஜூலியை அடுத்து, எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்னதியும் கோலிவுட்டில் ஹீரோயினாகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்