பிரபல இயக்குனர் வசந்தபாலன் தனது முதல் படமே ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த கதை என்றும் அந்த கதையை விக்ரமுடன் கூறி சம்மதம் பெற்றதாகவும் தயாரிப்பாளரும் முடிவு செய்யப்பட்டு அட்வான்ஸ் வாங்கி விட்ட நிலையில் எதிர்பாராத காரணத்தினால் அந்த படம் உருவாகவில்லை என்றும் கூறினார்.
இருப்பினும் அதே போன்ற ஒரு கதையில் பராசக்தி என்ற பெயரில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்திற்கு தனது வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது முகநூலில் கூறியிருப்பதாவது:
என் முதல் திரைப்படமாக பல்வேறு கதைகளை எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது இந்தி எதிர்ப்பு போராட்ட பின்னணியில் ஒரு கதை எழுதலாமே என்று ஒரு வருடம் அந்த ஆராய்ச்சியில் நூலகங்கள் ஏறி இறங்கி வரலாற்றைப் படித்து அந்த கதையை எழுதினேன். நடிகர் விக்ரம் அவர்களுக்கு கதையை விவரித்தேன்.அவருக்கு மிகவும் பிடித்து போனது.அமர்க்களம் திரைப்படத்தை தயாரித்த வெங்கடேஸ்வராலயம் அந்த திரைப்படத்தை தயாரிப்பதாக இருந்து முன்பணம் கூட பெற்று கொண்டேன். பல்வேறு புறக்காரணங்களால் அந்த திரைப்படம் மேற்கொண்டு நகர, நகர்த்த இயலவில்லை.
அண்ணா கடிதங்கள் தொடங்கி, திராவிட இயக்க வரலாறு, இந்தி எதிர்ப்பு போராட்டம் சம்பந்தமான பல்வேறு புத்தகங்களைப் படித்தவாறு இருந்தேன்.இரண்டு ஆண்டுகள் வெவ்வேறு கதாநாயகர்கள் வெவ்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் என பயணம் தொடர்ந்தது ஆனால் தேர் நகரவில்லை. அது என் கனவு மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள பல்வேறு கலைஞர்களின் கனவாக இருந்திருக்கும்.
இன்று சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டக் காட்சிகளைக் காணும் போது மகிழ்ச்சியாக இருந்தது.
முத்தமிழறிஞர் கலைஞரின் எழுச்சியான தலைப்பு.
நடிகர் திலகத்தின் முதல் திரைப்படம்
பல வெற்றி வரலாறு கொண்ட தலைப்பு.
தமிழகம் முழுக்க
கொழுந்து விட்டெரிந்த
இன்றும் கொழுந்து விட்டெரியும் தலைப்பு
பராசக்தி.
இயக்குநர் சுதா கொங்குராவிற்கும் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும்