கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் பழனிச்சாமி வாத்தியார்… அட யோகி பாபுவும் இருக்காரா?

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (14:57 IST)
தமிழ் சினிமாவில் 16 வயதினேலே படம் ரஜினி, கமல் மற்றும் பாரதிராஜா பல ஜாம்பவான்களை உருவாக்கியது போலவே கவுண்டமணி என்னும் நகைச்சுவை ஜாம்பவானையும் உருவாக்கியது. அதன் பின்னர் தனது உடல் மொழியாலும், கவுண்ட்டர் வசனங்களாலும் தமிழ் திரையுலகை ஆளுகை செய்ய ஆரம்பித்தார் கவுண்டமணி. 40 வயதுக்கு பின்னரே வாய்ப்புக் கிடைத்து அதன் பின்னர் அதன் மூலம் உச்சாணிக் கொம்புக்கு சென்றதில் எம் ஜி ஆருக்கும் கவுண்டமணிக்கும் மிகப்பெரிய ஒற்றுமை உண்டு.

6 ஆண்டுகளுக்கு முன்னர் கவுண்டமணி எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை என்ற படத்தில் கதாநயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டமணி ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பழனிச்சாமி வாத்தியார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும், இந்தப் படத்தை செல்வ அன்பரசன் என்பவர் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் பூஜையோடு படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.  இந்த படத்தில் கவுண்டமணியோடு யோகி பாபு, கஞ்சா கருப்பு இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.  மற்றும் ராதாரவி, சித்ரா லட்சுமணன், T.சிவா, மனோபாலா, J.S.K. சதீஷ் குமார், நந்தகோபால் R.K. சுரேஷ்,மதுரை  டாக்டர் சரவணன்,  மங்கை அரிராஜன், திருச்சி சுரேந்தர், சாந்தகுமார் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்