பாபநாசம் படத்தில் கமலுடன் நடித்த ராசி கௌதமிக்கு வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. நமது படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்தவர், விரைவில் பிரபுடன் நடிக்க உள்ளார்.
கௌதமி, பிரபு நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம், ராஜா கையை வச்சா. மழை வருது மழை வருது குடை கொண்டு வா... என்ற அற்புதமான பாடல் இடம்பெற்ற திரைப்படம். ரொமான்டிக் காமெடியான இந்தப் படம் 1990-இல் வெளிவந்தது. கிட்டத்தட்ட 26 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.
இவர்கள் இணையும் படம் குறித்த விவரத்தை இன்னும் வெளியிடவில்லை. ஆனால், அது நிச்சயம் சர்ப்ரைஸாக இருக்கும் என்று மட்டும் கௌதமி தரப்பு கூறியுள்ளது.