பரிதாபங்கள் கோபி& சுதாகரின் புதிய படம்… ஷூட்டிங் முடிவு –வீடியோ வெளியிட்டு அறிவிப்பு!

புதன், 6 செப்டம்பர் 2023 (08:23 IST)
சமூக வலைதளமான யுட்யூபில் மிகவும் பிரபலமாக அறியப்படும் கோபி மற்றும் சுதாகர் கிரவுட் பண்டிங் மூலமாக ஒரு படத்தை தொடங்க உள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தனர். இதற்காக தங்கள் யூட்யூப் சேனலின் பாலோயர்ஸிடம் இருந்து நிதி கேட்டனர். இதன் மூலம் சில கோடிகள் வரை வசூலானதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த படத்தை இன்னும் தொடங்காமல் வேறு ஒரு படத்தை தங்களது பரிதாபங்கள் புரொடக்‌ஷன் மூலமாக தயாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் பூஜையோடு தொடங்கிய இந்த படத்தை விஷ்ணு விஜயன் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின.

இந்நிலையில் இப்போது அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்