கார் ஓட்டும் போது நான் மது போதையில் இல்லை குற்றத்தை மறுக்கும் காயத்ரி

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (14:21 IST)
கார் ஓட்டும் போது நான் மது போதையில் இல்லை என நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார்! 
பிக் பாஸ் காயத்ரி மதுபோதையில் கார் ஓட்டி வந்து காவல்துறையினரிடம் பிடிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பிரபல நடன இயக்குநர் ரகுராமின் மகள் நடிகை காயத்ரி ரகுராம். இவர் பிரபுதேவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு சென்னை அடையாறு பகுதியில் சாஸ்த்ரி நகர் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த காரை மடக்கி ஆய்வு செய்த போது நடிகை காயத்ரி ரகுராம் கார் ஒட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, காரில் இருந்து இறங்குமாறு கூறிய போது, நடிகை காயத்ரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 
மது போதையில் இருப்பதை உணர்ந்த காவலர், பிரத் அனலைசர் கருவியை கொண்டு சோதனை செய்தார். அதில் அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு காவல்துறையினர் போக்குவரத்து விதிமீறல் சட்டப்படி ரூ.3 , 500 ஆயிரம் அபராதம் விதித்தனர். பின்னர் காயத்ரி மதுபோதையில் இருந்ததால், காவலரே காரை ஓட்டி சென்று அவரது வீட்டில் பத்திரமாக விட்டு விட்டு வந்தனர்.
 
இந்நிலையில் தான் கார் ஓட்டும் போது மது போதையில் இல்லை, தான் மீது பொய்குற்றம் சாற்றுவதக்காக இப்படிப்பட்ட பலியை சுமத்தியுள்ளதாகவும் ட்விட்டர் வாயிலாக விளக்கம் தெரிவித்துள்ளார். தம் மீது திட்டமிட்டு அவதூறு பரபரப்பபட்டதாகவும் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்