இன்னும் எவ்ளோதான் கடன் இருக்கு?- DD நெக்ஸ்ட் லெவல் டிரைலரைப் பார்த்து கௌதம் மேனனைக் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

vinoth

வியாழன், 1 மே 2025 (07:10 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். ஒரு காலத்தில் நகர்ப்புற மேல்தட்டு வர்க்க இளைஞர்களின் ஆதர்ச இயக்குனராக அவர் இருந்தார். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.

ஆனால் அதன் பின்னர் அவர் தயாரிப்புப் பணிகளில் கால்பதித்ததால் இயக்குனராக பின்னடைவை சந்தித்தார். அவர் இயக்கி தயாரித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. தற்போதைக்கு இயக்குனராக தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. இதற்கிடையில் அவர் நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

நடிப்பது பற்றி பேசும்போது “என்னுடைய கடன் பிரச்சனைகள் காரணமாகதான் நான் நடிக்கிறேன்”என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ரிலீஸான ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் கௌதம் மேனனின் ‘காக்க காக்க’ படத்தில் இடம்பெற்ற ‘உயிரின் உயிரே’ பாடலை ரி க்ரியேட் செய்து அதில் அவரையே நடிக்க வைத்துள்ளனர். இந்த காட்சியைப் பார்க்கும் நெட்டிசன்கள் ‘இன்னும் எவ்ளோதான் உங்களுக்குக் கடன் இருக்கு” எனக் கூறி கேலி செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்