பிரபல இயக்குனரான கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான படம் “வெந்து தணிந்தது காடு. அந்த படத்துக்குப் பிறகு நீண்ட ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் தன்னுடைய துருவ நட்சத்திரம் படத்தின் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார் கௌதம் மேனன். இதற்கிடையில் நடிப்பில் கவனம் செலுத்தும் அவர் அதிகளவில் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் முக்கிய வேடத்தில் சிம்புவின் பத்து தல படத்தில் நடித்துள்ளார்.
கௌதம் மேனன் நடிப்பில் இப்போது உருவாகி வரும் படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக விஜய் நடிக்கும் லியோ படம் உள்ளது. இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், கௌதம் மேனன் இதுபற்றி பேசும்போது “இயக்குனர் லோகேஷ் படம் பற்றி எந்த அப்டேட்டும் கொடுத்து விடாதீர்கள்.மேலும் கேட்டால் ஷூட்டிங் நல்ல அனுபவமாக இருந்தது என சொல்லிவிடுங்கள் எனக் கூறிவிட்டார்” என ஜாலியாக படம் பற்றி பேசியுள்ளார்.