விஜய்யின் அடுத்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன்

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (16:15 IST)
விஜய் நடிக்கும் அடுத்த படத்தை  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.

மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதன்பின் அவர் இயக்கிய கைதி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இந்த நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 67 என்ற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.  இந்நிலையில் திடீரென டுவிட்டரில் இருந்து தற்காலிகமாக விலகுவதாகவும், அடுத்தபட அறிவிப்பின்போது மீண்டும் வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இப்போது அவர் விஜய் படத்தின் திரைக்கதை வேலைகளில் பிஸியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. கதைப்படி படத்தில் 6 வில்லன்கள் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் பிருத்விராஜ், சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோர் நடிக்க வாய்ப்புள்ளதாக சொலல்ப்படுகிறது. அந்தவகையில் இப்போது மற்றொரு வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்