இசை ஒழுங்கா அமைக்கலன்னா அப்புறம் ‘இந்தியன் 2’ மாதிரிதான் ஆகும்… கங்கை அமரன் விமர்சனம்!

vinoth

செவ்வாய், 12 நவம்பர் 2024 (12:09 IST)
கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான இந்தியன் 2 திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை எதிர்கொண்டது. இதுவரை ஷங்கர் கேரியரில் இல்லாத அளவுக்கு மோசமான வசூலையும் பெற்று வருகிறது.

மோசமான விமர்சனங்களாலும், கேலிகளாலும் படத்தில் இருந்து 12 நிமிட நேரத்தைக் குறைத்தனர். ஆனால் அப்போதும் அந்த படம் ரசிகர்களை தியேட்டருக்குள் ஈர்க்கவில்லை. இந்நிலையில் இந்தியன் 3 மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு அப்படியே படுத்துவிட்டது. இந்த படத்தில் ஷங்கரின் திரைக்கதை, வசனம் ஆகியவை கேலி செய்யப்பட்ட அளவுக்கு அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் கேலிக்கு ஆளானது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பாடலாசிரியரும் இயக்குனருமான கங்கை அமரன் “இசை என்பது ஒழுங்காக, கவனமாக செய்ய வேண்டியது. அப்படி செய்யவில்லை என்றால் ‘இந்தியன் 2’ படம் மாதிரிதான் ஆகும். இதை நான் சொல்வதற்குக் கவலைப்படவில்லை. ஒரு இசையமைப்பாளனாக இதை நான் சொல்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்