தியேட்டரில் வெளியாகி இரண்டே வாரத்தில் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும் ஜி வி பிரகாஷின் ரிபெல் திரைப்படம்!

vinoth

சனி, 6 ஏப்ரல் 2024 (10:23 IST)
இந்த ஆண்டில் வெள்ளிக்கிழமை ஹீரொவாக ஆகிவிட்டார் ஜி வி பிரகாஷ். கடந்த மூன்று வாரங்களில் அவர் நடித்த இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகிவிட்ட நிலையில் அடுத்த வாரம் இன்னொரு படமும் ரிலீஸ் ஆகவுள்ளது.

கடந்த மார்ச் 22 ஆம் தேதி ஜி வி பிரகாஷ், மமிதா பைஜு நடிப்பில்  நிக்கேஷ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கிய ரிபெல் திரைப்படம் ரிலீஸ் ஆனது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட்டது.

படம் மூனாறில் நடந்த ஒரு உண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இந்த படத்தால் ரசிகர்களை திரையரங்கு நோக்கி இழுக்க முடியவில்லை. முதல் வார இறுதியிலேயே பெருவாரியான திரையரங்குகளில் இருந்து படம் தூக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது படம் ரிலீஸாகி இரண்டே வாரங்களில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. ஒரு படம் ரிலீஸாகி 28 நாட்கள் கழித்துதான் ஓடிடியில் ரிலீஸ் ஆகவேண்டுமென்பது தமிழ் சினிமாவில் இருக்கும் விதி. அதை மீறி ரிபெல் திரைப்படம் ரிலீஸ் ஆகி இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்