கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழகம்-எடப்பாடி பழனிசாமி

sinoj

செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (19:42 IST)
18 வது மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
 
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  இன்று திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரில், திருவண்ணாமலை தொகுதி கழக வேட்பாளர் திரு. M. கலியபெருமாள் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அவரை மகத்தான வெற்றி பெறச் செய்திடுமாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 
 
இன்றைய பிரசாரத்தின்போது அவர் கூறியதாவது: கடன் வாங்குவதில் முதன்மை  மாநிலம் தமிழகம் தான் முதலிடம். நாட்டிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்துவிட்டது. வீடு கட்டுவோர் கனவில்தான் கட்ட முடியும் என தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்