அட்லி & அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ஜப்பானிய நடனக் கலைஞர்!

vinoth

செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (10:59 IST)
அட்லி இயக்கத்தில் இதுவரை வெளியாகி இருப்பது ஐந்தே படங்கள்தான். ஆனால் அந்த படங்களின் வெற்றி காரணமாக இன்று இந்திய அளவில் அறியப்பட்ட இயக்குனராக இருக்கிறார். தற்போது அல்லு அர்ஜுனை வைத்து பிரம்மாண்டமாக ஒரு அறிவியல் புனைகதைப் படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது; சாய் அப்யங்கர் இசையமைக்க, ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

அதனால் இந்த படத்தை இந்தியாவைத் தாண்டியும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம். அதனால் ஹாலிவுட்டின் முன்னணி ஸ்டுடியோவான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை இந்தியா தாண்டியும் ரிலீஸ் செய்ய பல்வேறு முயற்சிகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் ஜப்பானிய நடனக் கலைஞரான ஹோகுடா கோனிஷி இணைந்துள்ளார். ஒரு பாடலுக்கு அவர் நடன இயக்குனராக பணியாற்றவுள்ளதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் இணையத்தில் பகிர அது வைரல் ஆகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்