விவசாயிகளை திமுக அரசு புறக்கணிக்கிறது- எடப்பாடி பழனிசாமி

sinoj

வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (20:20 IST)
இந்தியா கூட்டணி கூட்டத்தில், கர்நாடகாவிடம் பேசி தமிழகத்திற்கு தண்ணீர் பெற முயற்சிக்காதது ஏன்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல்  நடக்கவுள்ளது.  இதற்காக  அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
 
தமிழகத்தில் அதிமுக தலைமையில் தேமுதிக, புரட்சிப் பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. சமீபத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியாகி, வேட்புமனு தாக்கலும் நடைபெற்றது.
 
இந்த நிலையில், இன்று அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து  பிரசாரம் மேற்கொண்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: 
 
''எவ்வளவு தொற்சாலைகள் இருந்தாலும் உணவு கொடுப்பவர் விவசாயிதான். அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ரூ.1652 கோடி ஒதுக்கப்பட்டது. திமுக எம்.பி.க்கள் தமிழக மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
 
மேலும், விவசாயிகளை  திமுக அரசு புறகணிக்கிறது. விவசாயிகளை காக்கும் ஒரே அரசு அதிமுகதான்.  10 சதவீத வாக்குறுதிகளை கூட திமுக நிறைவேற்றவில்லை.  அதிமுக அழுத்தம் கொடுத்ததால்தான் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நிறைவேற்றினார்கள். அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது'' என்று கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்