ஜி வி பிரகாஷ் & சைந்தவி பிரிவு நடந்தது ஏன்?... ஜிவியின் அம்மா ஏ ஆர் ரெஹானா பதில்!

vinoth
செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (08:11 IST)
2013 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், தனது பள்ளிகால தோழியும் பாடகியுமான சைந்தவியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குக் கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த மே மாதம் இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் விவாகரத்துக்கு என்ன காரணம் என்று யுடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பலவிதமான கருத்துகளைப் பலரும் பேச ஆரம்பித்தனர். அதில் பெரும்பாலானவர்கள் ஜிவி பிரகாஷை குற்றம்சாட்டுவது போலவும் அவரது நடத்தையை விமர்சிப்பது போலவும் பேசியிருந்தனர்.

இதையடுத்து சைந்தவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் “தங்களுக்கு கிடைத்த செய்திகளை வைத்துக் கொண்டு பலரும் பலவிதமாக பேசுவது இதயத்தை நோகச் செய்கிறது. எங்கள் விவாகரத்து எந்தவொரு புற காரணத்தாலும் நடக்கவில்லை. எவர் ஒருவரையும் காரணமின்றி அவதூறு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. எங்கள் முன்னேற்றத்துக்காக நாங்கள் சேர்ந்து எடுத்த முடிவு இது.  நானும் ஜி வி பிரகாஷும் 24 ஆண்டுகளாக பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்கள். எங்கள் நட்பு இனிமேலும் தொடரும்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய ஆல்பம் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஜிவி பிரகாஷின் தாயும் இசையமைபபளருமான ஏ ஆர் ரெஹானாவிடம் அவர்கள் பிரிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் “எல்லோரும் சேர்ந்து வாழவேண்டும் எனதான் ஆசைப்படுகிறோம். ஆனால் எல்லோருக்கும் அப்படி அமைவதில்லை. ஜி வி பிரகாஷ் சைந்தவி பிரிவுக்கு சூழ்நிலைதான் காரணம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்