ஜி எஸ் டி யில் சிக்கிய ஜி வி பிரகாஷ் – நீதிமன்றத்தில் வழக்கு !

Webdunia
ஞாயிறு, 1 மார்ச் 2020 (09:43 IST)
இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்

பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் தான் இசையமத்த பாடல்களின் பதிப்புரிமை தொடர்பாக ஜி எஸ் டி வரி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளார்.

இசையமைப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜி வி பிரகாஷ், இப்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக அவர் நடிப்பில் ஜெயில் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் அவர் இசையமைத்த பாடல்களின் பதிப்புரிமைக்காக அவர் 1.84 கோடி ரூபாய் காப்புரிமை அளிக்க வேண்டும் என ஜி எஸ் டி இணை ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார்.

இதை எதிர்த்து ஜி வி பிரகாஷ் தாக்கல் செய்துள்ள மனுவில் ‘நான் இசையமைத்த பாடல்களின் உரிமையை தயாரிப்பாளர்களுக்கு வழங்கி விட்டேன். அதனால் தனக்கு வரி விதிக்க முடியாது’ எனத் தாக்கல் செய்துள்ளார். மேலும் தனக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சரக்கு மற்றும் சேவை வரித் துறைக்கு இது சம்மந்தமாக பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்