அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு : முதல்வர் பழனிசாமி அதிரடி உத்தரவு

புதன், 31 ஜூலை 2019 (20:04 IST)
அரசு கேபில் டிவி அறிமுகப்படுத்தப் பட்டதில்  இருந்தே மக்கள் இதன் கட்டணம் அதிகமாக உள்ளது என்று கூறிவந்தனர். இதுசம்பந்தமாக தமிழக முதல்வர் பழனிசாமிக்கு, மக்கள் கேபிள் டிவி கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று மக்களின் கோரிக்கையை ஏற்று எடப்பாடி பழனிசாமிஅதிராடியாக உத்தரவிட்டுள்ளார்.
 
அதில், அரசு கேபிள் டிவி கட்டணம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குறைக்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 10 முதல் 130 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரி என்ற மாத சந்தா கட்டணமாக நிர்ணயிக்கப்படும்.
 
தற்போது வேலூர் மாவட்டத்தில்   நீங்கலாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்