திரைப்படத்தில் நடிக்கும் பிரபல அதிகாரி ஜாங்கிட்! – அதிலும் போலீஸ் ரோல்தான்!

வியாழன், 17 மார்ச் 2022 (12:03 IST)
தமிழகத்தின் பிரபல முன்னால் காவல் அதிகாரி ஜாங்கிட் தற்போது படம் ஒன்றில் முதன்முறையாக நடிக்கிறார்.

தமிழ்நாட்டின் முன்னாள் போலீஸ் அதிகாரிகளில் பிரபலமான ஒருவர் ஜாங்கிட். தமிழ்நாட்டில் கைவரிசை காட்டிய பவாரியா கொள்ளை கும்பலை தேடி சென்று ஜாங்கிட் தலைமையிலான குழு கைது செய்த சம்பவம் முன்னதாக எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலமாக திரைக்கு வந்து ஹிட் ஆனது.

தற்போது முன்னாள் காவல் அதிகாரி ஜாங்கிட் தானே சினிமாவிலும் நடித்துள்ளார். நடிகர் விமல் நடித்துள்ள குலசாமி என்ற படத்தில் நடித்துள்ள ஜாங்கிட் அதிலும் பெண்களுக்கு எதிரான குற்றவாளிகளை அடக்கி ஒடுக்கும் காவல் அதிகாரி வேடத்திலேயே நடித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்