''SBIவங்கி'' வாடிகையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

புதன், 16 மார்ச் 2022 (22:56 IST)
'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' தனது வாடிக்கையாளருக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பான் கார்டை  , ஆதார் எண்ணுடன் இணைகக வேண்டுமென மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இதற்காக காலக்கெடுவை பலமுறை மத்திய அரசு நீட்டித்துள்ளது.  இந்நிலையில் வரும் மார் 31 ஆம் தேதி ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்ககக கடைசி நாள் எனத் தெரிவித்துள்ளாது.

இதை இணைக்காதவர்களுக்கு ரூ.1000  அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ    தன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்த மாத இறுதிக்குள் பான் கார்டுகளை ஆதர்   எண்ணுடன் இணைக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டுள்ளது.  மார்ச் 31      வரை  இதற்குக் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இல்லாவிட்டால் அவர்களின் வங்கிச் சேவை நிறுத்தப்படும் எனவும், கிரேடிட் கார்டுகள்,  டெபிட் கார்டுகள் பயன்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்