தடம் படத்திற்காக திருவண்ணாமலையில் கிரிவலம் - அருண் விஜய் ட்வீட்

Webdunia
வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (15:50 IST)
நடிகர் அருண் விஜய் நடித்த தடம் படத்திற்காக திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று தரிசனம் செய்துள்ளார்.
நடிகர் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தடம். குற்றம் - திரில்லர் கதைக்களத்தில் வெளியான இப்படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். அந்த திரைப்படம் 50-வது நாளை கடந்ததையொட்டி, திருவண்ணாமலை கோயிலில்  சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார் அருண் விஜய்.
நடிகர் அருண் விஜய் நடித்த தடம் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் அருண் விஜய்க்கு பெயர் சொல்லும்  படமாக அமைந்திருக்கிறது.

காஞ்சனா 3 - திரை விமர்சனம்
 
தடம் திரைப்படம் தற்போது 50வது நாளை கடந்துள்ளது. இது படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வெற்றியை  கொண்டாடும் விதமாக நடிகர் அருண் விஜய், திருவண்ணாமலை கோவிலில் சிறப்பு தரிசனம் செய்து, கிரிவலம் சென்றிருக்கிறார்.
 
அப்போது  எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தடம் திரைப்படம் 50 நாள் வெற்றிகரமாகக் கடந்ததையடுத்து, குடும்பத்துடன் திருவண்ணாமலை, கிரிவலம் சென்றேன் என்று அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்